முகப்பு
  
எம்மை பற்றி
 
அமைச்சின் கீழுள்ள நிறுவனங்கள்
 
புள்ளிவிபரங்கள்
 
செய்தியும் அறிவித்தலும்
 
வெளியீடுகள்
 
இணைப்பு
 
தொடர்புகளுக்கு
 
 
 
 
 
நோக்கு
   

பெருந்தோட்டக்கைத்தொழில் அபிவிருத்தியின் ஊடாக தேசிய சௌபாக்கியத்தை தோற்றுவித்தல்

 
இலக்கு
   

பொருளாதார சமூக மற்றும் சுற்றாடல் ரீதியில் உறுதி செய்யப்பட்ட பெருந்தோட்டத் துறையின் மூலம் பெருந்தோட்ட கைத்தொழிலின் கசூலையும் இலாபத்தையும் உறுதியாக முன்னேற்றஞ் செய்தல்

 

பெருந்தோட்டக்கைத்தொழில் அமைச்சர்
கௌரவ. மகிந்த சமரசிங்க அவர்கள்

;

தொலைபேசி
: 94 - 011 - 2388235
தொலைநகல்
: 94 - 011 - 2431734
மின்னஞ்சல்
: minplind@sltnet.lk
 

பெருந்தோட்டக்கைத்தொழில் பிரதி அமைச்சர் கௌரவ ஏழ் குணசேகர அவர்கள்

 

  தொலைபேசி
  94 - 011 - 2302628
  தொலைநகல்
  94 - 011 - 2302630
  மின்னஞ்சல்
  ecourt@sltnet.lk

பெருந்தோட்டக்கைத்தொழில் அமைச்சின் செயலாளர்
கௌரவ சுதர்மா கருணாரட்ன அவர்கள்

தொலைபேசி
: 94-011-2445397
தொலைநகல்
: 94-011-2438031
மின்னஞ்சல்
:
: secypi@sltnet.lk

வடபிராந்தியத்திலும் இறப்பர் செய்கை விரிவுபடுத்தப்பட வேண்டும்

வடபிராந்தியப் பகுதியிலும் இறப்பர் செய்கையை வெற்றிகரமாக மேற்கொள்ளலாம் என கௌரவ அமைச்சர் மகிந்த சமரசிங்க அவர்கள் அறிவித்தார். 2012.11.29 அன்று பெருந்தோட்டக் கைத்தொழில் அமைச்சில் நிகழ்ந்த ஊடகவியலாளர் மாநாட்டில் அமைச்சர் இவ்வாறு தெரிவித்தார்.

கௌரவ அமைச்சர் மகிந்த சமரசிங்கவின் வழிகாட்டல்களுக்கமைய வவுனியா, கிளிநொச்சி, முல்லைத்தீவு மாவட்டங்களில் பரீட்சார்த்த இறப்பர் ஆராய்ச்சி நிலையங்கள் 2010 ஆம் ஆண்டிலிருந்து நிறுவப்பட்டுள்ளது. இப்பரீட்சார்த்த நடவடிக்கைகளில் இருந்து வடமாகாணங்களில் இறப்பர் சிறப்பாக வளர்ச்சியடைகின்றமை கண்டறியப்பட்டுள்ளது.

கௌரவ அமைச்சர் மேலும் கூறியதாவது அதிக இலாபம் தரக்கூடிய இறப்பர் செய்கையை ஏற்கனவே கிழக்கு பிராந்தியங்களில் அறிமுகப்படுத்துவதற்குரிய நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன. இவற்றை விட போரினால் பாதிக்கப்பட்ட வட பகுதியிலும் இறப்பரை அறிமுகப்படுத்துவதன் மூலம் அதிக வருபானத்தை நாடு பெற்றுக்கொள்ளும் எனவும் அத்துடன் வேறு பிரதேசங்களில் அரசாங்க ஊழியர்கள் விவசாயிகள் மற்றும் பங்குகளை வைத்திருப்பவர்கள் உடன் சேர்ந்து தொழிலாற்றுவதற்கு உரிய அவசிய நடவடிக்கைகளை பெருந்தோட்ட கைத்தொழில் அமைச்சு விரைவில் மேற்கொள்ளும் எனவும் அமைச்சர் உறுதியளித்தார்.


பயிர்ச்செய்கை மேற்கொள்ளப்படாத நிலங்கள் தொடர்பான ஆய்வு அறிக்கையினை அதிமேதகு ஐனாதிபதி மகிந்த ராஐபக்ஷ விடம் முன்வைத்தல்

பெருந்தோட்டக்கைத்தொழில் அமைச்சர் கௌரவ மகிந்த சமரசிங்க பெருந்தோட்டங்களில் பயிரிடப்படாத நிலங்களின் விபரம் தொடர்பான அறிக்கையை 2011 ஆகஸ்டு 30 ஆம் திகதி டெம்பிள் ட்ரீஸ் இல் நடைபெற்ற நிகழ்வொன்றில் அதிமேதகு ஐனாதிபதி மகிந்த ராஐபக்ஷவிடம் கையளித்தார்

11 நிர்வாக மாவட்டங்களில் காணப்பட்ட 372 பெருந்தோட்டங்கள் தொடர்பான தரவுகளை சேகரித்ததன் மூலம் இவ்வறிக்கை தயாரிக்கப்பட்டது.

இவ்வறிக்கையின் பிரகாரம் 15 178 கெக்டெயர் நிலங்கள் பயிரிடப்படக்கூடிய நிலையில் காணப்பட்டும் பயிர்ச்செய்கை மேற்கொள்ளப்படாமல் இருப்பது அடையாளம் காணப்பட்டுள்ளது.

 

 

 
 
 
   
     
© Plantation Ministry. Allrights reserved 2010   Site by SLTnet.

Last update 17.05.2012.